Home இலங்கை அனுமதிப்பத்திரமின்றி மணல் கடத்தல் – 3 டிப்பர்களுடன் சாரதிகள் கைது!

அனுமதிப்பத்திரமின்றி மணல் கடத்தல் – 3 டிப்பர்களுடன் சாரதிகள் கைது!

0
image

அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றிச் சென்ற மூன்று டிப்பர் வாகனங்களும், அவற்றின் சாரதிகள் மூவரும் பொலிஸாரால் இன்று (25) கைது செய்யப்பட்டு கந்தளாய் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.

நேற்று (24) மாலை முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளின்போது, கந்தளாய் – அக்போபுர பொலிஸாரால் இரண்டு டிப்பர் வாகனங்களும், கந்தளாய் – சூரியபுர பொலிஸாரால் ஒரு டிப்பர் வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளன.

மகாவலி ஆற்றிலிருந்து சட்டவிரோதமாக மணல் ஏற்றிக்கொண்டு கொழும்பு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தபோதே குறித்த வாகனங்கள் மடக்கிப் பிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட மூன்று சாரதிகளும் இன்று கந்தளாய் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்போபுர மற்றும் சூரியபுர பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Source: https://samugammedia.com/sand-smuggling-without-permission–drivers-arrested-with-3-tipper-trucks-1790331660

NO COMMENTS

Exit mobile version