Home உலகம் அமெரிக்க ரகசிய சேவை முகவராக 13 வயது சிறுவன்: ட்ரம்பின் அறிவிப்புக்கு காரணம் என்ன..!

அமெரிக்க ரகசிய சேவை முகவராக 13 வயது சிறுவன்: ட்ரம்பின் அறிவிப்புக்கு காரணம் என்ன..!

0

அமெரிக்க ரகசிய சேவை முகவராக டி.ஜே. டேனியல் என்ற 13 வயது சிறுவனை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப (Donald Trump) அறிவித்துள்ளார்.

ட்ரம்ப் இன்று (05) காங்கிரஸ் கூட்டுக் கூட்டத்தில் ஆற்றிய உரையானது வரலாறாக மாறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

காரணம்

அதன்போது, சட்ட நடைமுறையாக்க அதிகாரியாக டி.ஜே. டேனியல் என்ற இளம் சிறுவனின் முயற்சிகள் குறித்து ட்ரம்ப் தனது உரையில் எடுத்துரைத்துள்ளார்.

ட்ரம்பின் குறித்த அறிவிப்பானது, டேனியல் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஒரு கனவு நனவான தருணமாக அமைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

ஏனெனில், 2018 ஆம் ஆண்டு முதல், டேனியலுக்கு மூளைப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

கனவை நனவாக்கிய ட்ரம்ப்

இவ்வாறானதொரு பின்னணியில், புற்றுநோயுடன் போராடி வரும் டேனியலுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள் அதிகபட்சம் 5 மாதங்கள் மட்டுமே உயிர்வாழ முடியும் என தெரிவித்துள்ளனர்.

எனினும், வலிமையான மற்றும் உறுதியான நிலைப்பாட்டுடன் இருப்பதால் டேனியல் விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை எனவும் அவரது தந்தையும் தனது மகனின் கனவுகளை நனவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், டேனியலை ஒரு ரகசிய சேவை முகவராக அறிவித்து, சிறுவனின் கனவை நனவாக்கியுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version