Home உலகம் புத்தாண்டை இலக்குவைத்த ஐ.எஸ்.ஐ.எஸ் தாக்குதல் திட்டம்! வெளிநாடொன்றில் 115 பேர் கைது

புத்தாண்டை இலக்குவைத்த ஐ.எஸ்.ஐ.எஸ் தாக்குதல் திட்டம்! வெளிநாடொன்றில் 115 பேர் கைது

0

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களை இலக்குவைத்து தாக்குதல் நடத்த தயாரான ஐ.எஸ்.ஐ.எஸ் குழுவைச் சேர்ந்த 115 பேரை  துருக்கிய காவல்துறை கைதுசெய்துள்ளது.

இதனுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் சதித்திட்டங்கள் தொடர்பாக நாடு முழுவதும் ஒருங்கிணைந்த சோதனைகளில் குறித்த 115 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இஸ்லாமிய அரசு என்று அழைக்கப்படும் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தினர் விடுமுறை காலத்தில் துருக்கியில் தாக்குதல்களைத் திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு புலனாய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இதனை அடுத்து, 137 சந்தேக நபர்களுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக இஸ்தான்புல் சட்டத்தரணிகள் அலுவலகம் வியாழக்கிழமை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தாக்குதல் நடவடிக்கை

“கிறிஸ்துமஸ் மற்றும் எதிர்வரும் புத்தாண்டு நிகழ்வுகளின் நாட்டின் எல்லைப்பிராந்தியங்களை ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு இலக்குவைத்துள்ளது.

இதன்படி தமது நாட்டை, குறிப்பாக முஸ்லிம் அல்லாத நபர்களை குறிவைத்து தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதமேந்திய அமைப்பு திட்டமிட்டுள்ளதாக தகவல் கண்டறியப்பட்டது” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும், அவர்கள் அந்த அமைப்பு நடவடிக்கைகளின் எல்லைக்குள் மோதல் மண்டலங்களுடன் தொடர்பில் இருந்தனர்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

124 முகவரிகளில் ஒரே நேரத்தில் கைது, சோதனை மற்றும் பறிமுதல் நடவடிக்கைகளை அந்நாட்டு காவல்துறையினர்  மேற்கொண்டுள்ளனர்.

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை

இதன்போது கைத்துப்பாக்கிகள், வெடிமருந்துகள் மற்றும் சந்தேகத்துக்கிடமான நிறுவன ஆவணங்கள் என்று விவரித்தவற்றை காவல்துறையினர்  பறிமுதல் செய்துள்ளனர்.

மீதமுள்ள 22 சந்தேக நபர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக 2017 ஆம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது இஸ்தான்புல்லில் உள்ள விடுதி ஒன்றில் ஐ.எஸ்.ஐ.எஸ் நடத்திய தாக்குதலில் பல மக்கள் கொல்லப்பட்டதிலிருந்து, ஆண்டு இறுதி விடுமுறை நாட்களில் துருக்கி தொடர்ந்து பரந்த அளவிலான பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது .

இந்நிலையில் விசாரணை தொடர்ந்தால் கூடுதல் தகவல்கள் வெளியிடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளரத குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version