Home உலகம் நத்தார் தினத்தில் நாசா வெளியிட்ட பிரம்மாண்ட புகைப்படம்…!

நத்தார் தினத்தில் நாசா வெளியிட்ட பிரம்மாண்ட புகைப்படம்…!

0

ஹபிள் வான் தொலைநோக்கி மூலமாக எடுக்கப்பட்ட ஸ்வன் நெபுலா புகைப்படத்தை பகிர்ந்து கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை அமெரிக்காவின் நாசா அமைப்பு தெரிவித்து உள்ளது.

இந்தப் புகைப்படம் இணையத்தில் தற்போது அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.

நாசா ஒவ்வொரு கிறிஸ்துமஸ் பண்டிகையின் போதும் விண்வெளியில் நடக்கும் கொண்டாட்டங்கள், விண்வெளி வீரர்கள் அனுப்பும் வாழ்த்துச் செய்திகள் மற்றும் கிறிஸ்துமஸ் மரம் போன்ற வடிவங்களில் உள்ள நட்சத்திரக் கூட்டங்களின் படங்களைப் பகிர்ந்து வருகின்றது.

கிறிஸ்துமஸ் வாழ்த்து

இதனடிப்படையில், இந்த ஆண்டில் சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள வீரர்கள் பூமியில் உள்ள மக்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில், ஹபிள் வான் தொலைநோக்கி மூலமாக எடுக்கப்பட்ட ஸ்வன் நெபுலா புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து நாசா கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.

மேலும், கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள், இந்த வருடம் நாங்கள் உங்களுக்கு பரிசாக இந்தப் படத்தை வழங்குகிறோம் என நாசா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version