தி லயன் கிங் கார்ட்டூன் திரைபடத்திற்கு பின்னணி குரல் கொடுத்த நடிகை இமானி ஸ்மித் என்பவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
1990 ஆம் ஆண்டுகளைச் சேர்ந்த சிறுவர் மற்றும் சிறுமிகளுக்கு மிகவும் விருப்பமான கார்ட்டூன் படங்களில் ஒன்று தி லயன் கிங் ஆகும்.
இந்தநிலையில், 2011 இல் இத்திரைப்படத்திலுள்ள இளம் நாலா என்ற கதாப்பாத்திரத்திற்கு குரல் கொடுத்தவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணைகள்
குறித்த நடிகை அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் வசித்து வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில், டிசம்பர் 21 ஆம் திகதி அவரது வீட்டில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் அவர் காணப்பட்டுள்ளார்.
இதையடுத்து, காவல்துறையினரால் சிகிச்சைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இருப்பினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் நடிகையின் நண்பரான ஜோர்டன் டி ஜேக்சன் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அத்தோடு, சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
