பங்காளதேசத்தில் மற்றுமொரு இந்து இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ராஜ்பாரி மாவட்டத்தைச் சேர்ந்த அம்ரித் மண்டல் என்ற 29 வயது இந்து இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், பங்களாதேஷ் டாக்கா நகரில் உள்ள தேவாலயத்தில் நேற்று குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது.
பெரும் பரபரப்பு
பஜார் பகுதியில் உள்ள தேவாலயம் அருகே வீதியில் ஏராளமானவர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையொட்டி கூடியிருந்த நிலையில் மர்மநபர்கள் அங்கு நாட்டு வெடிகுண்டு ஒன்றை மக்கள் கூட்டத்தில் தூக்கி வீசிவிட்டு தப்பினர்.
பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறிய குண்டுவெடிப்பில் சிக்கி சியாம் என்ற வாலிபர் உடல் சிதறி உயிரிழந்தார்.
படுகாயம் அடைந்த பலர் மீட்கப்பட்டு வைத்தியசாலையிவ் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அடுத்தடுத்த சம்பவங்களால் பங்களாதேஷில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.
கடுமையாக தாக்கிய கும்பல்
இந்த சூழலில், ராஜ்பாரி மாவட்டத்தைச் சேர்ந்த அம்ரித் மண்டல் என்ற 29 வயது இந்து இளைஞரை, அப்பகுதியைச் சேர்ந்த கும்பல் நேற்று கடுமையாக தாக்கியுள்ளது.
இதில் படுகாயம் அடைந்த அவர், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
வழிப்பறி முயற்சியில் ஈடுபட்ட போது உள்ளூர் மக்கள் பிடித்து தாக்கியதில் பலியானதாக சொல்லப்படும் நிலையில் இது தொடர்பாக காவல்துறையினர் விசாரித்து வருகிறார்கள்.
