திருகோணமலை, சேருநுவர பொலிஸ் பிரிவிலுள்ள மஹிந்தபுர பகுதியிலுள்ள சிறிய குளத்தில் யானையொன்று உயிரிழந்த நிலையில் இன்று (23) காணப்படுகிறது.
உயிரிழந்த இவ் காட்டு யானையானது சுமார் 35 வயதுடையதென தெரியவருகிறது.இவ் யானை உயிரிழந்தமைக்கான காரணம் கண்டறியப்படவில்லை.இது விடயமாக சேருநுவர வனவிலங்கு அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதுடன் அவர்கள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Source: https://samugammedia.com/wild-elephant-dies-1782192727
