Home இலங்கை வெளிநாட்டு பெண்களை துரத்திய காட்டு யானை – சீகிரியாவில் நள்ளிரவு பரபரப்பு

வெளிநாட்டு பெண்களை துரத்திய காட்டு யானை – சீகிரியாவில் நள்ளிரவு பரபரப்பு

0
image

சீகிரியா நுழைவாயில் பகுதியில் நள்ளிரவு வேளையில் இடம்பெற்ற காட்டு யானை அச்சுறுத்தல் சம்பவத்தில், 4 வெளிநாட்டு பெண்கள் மயிரிழையில் உயிர்தப்பியுள்ளனர்.

சம்பவத்தின்போது, சுற்றுலா பயணமாக வந்திருந்த பெண்கள் நுழைவாயில் பகுதிக்கு நடந்து வந்துகொண்டிருந்த சமயம் திடீரென காட்டு யானை ஒன்று அவர்களை நோக்கி வேகமாக ஓடி வந்துள்ளது. 

இதனால் பதற்றமடைந்த பெண்கள் அலறியடித்தபடி அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். 

யானை அவர்களை நோக்கி துரத்திச் செல்லும் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளதுடன், அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

அதிர்ஷ்டவசமாக வெளிநாட்டு பெண்களுக்கு எந்தவித உயிர்சேதமோ காயங்களோ ஏற்படவில்லை. எனினும், இந்த சம்பவம் சுற்றுலாப் பயணிகள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

வனவிலங்குகள் நடமாட்டம் அதிகம் காணப்படும் பகுதிகளில் இரவு நேரங்களில் அவதானத்துடன் நடந்து கொள்ளுமாறு அதிகாரிகள் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

Source: https://samugammedia.com/wild-elephant-chased-foreign-women—midnight-commotion-in-sigiriya-1782192687

NO COMMENTS

Exit mobile version