Home இலங்கை காணாமல்போன துப்பாக்கி – யடியந்தோட்டை போக்குவரத்து பிரிவு ஓ.ஐ.சி கைது

காணாமல்போன துப்பாக்கி – யடியந்தோட்டை போக்குவரத்து பிரிவு ஓ.ஐ.சி கைது

0
image

தன்னுடைய உத்தியோகபூர்வ துப்பாக்கி காணாமல் போனமை தொடர்பாக, யடியந்தோட்டை பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பிரிவுக்கு பொறுப்பான பொறுப்பதிகாரி  கைது செய்யப்பட்டுள்ளார்.

சீதாவகபுர குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளினால் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

கடந்த 26ஆம் திகதி குறித்த பொறுப்பதிகாரி கடமை நிமித்தம் வெளியில் சென்ற போது, பிஸ்டல் வகை துப்பாக்கி ஒன்றையும் 10 தோட்டாக்களையும் எடுத்துச் சென்றுள்ளார் என்றும், எனினும் மீண்டும் அந்தத் தோட்டாக்களை அவர் ஒப்படைக்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

 

இதற்கமைய, விசாரணைகளை மேற்கொண்ட சீதாவகபுர குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள், யடியந்தோட்டை பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பிரிவு ஓ.ஐ.சி ஆகக் கடமையாற்றிய உப பொலிஸ் பரிசோதகரை நேற்று (27) கைது செய்துள்ளனர்.

 

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று (28) ருவான்வெல்ல நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Source: https://samugammedia.com/missing-gun—yadiyanthottai-traffic-department-oic-arrested-1782644741

NO COMMENTS

Exit mobile version