Home இந்தியா இந்தியாவில் பரபரப்பு – மீண்டும் ஒரு விமான விபத்து : பயணித்த அனைவரும் பலி

இந்தியாவில் பரபரப்பு – மீண்டும் ஒரு விமான விபத்து : பயணித்த அனைவரும் பலி

0

இந்தியா (India) – ஸ்ரீ கேதார்நாத் தாம் நகரிலிருந்து குப்தகாஷிக்குச் சென்று கொண்டிருந்த உலங்குவானுர்தி ஒன்று கௌரிகுண்ட் அருகே விபத்துக்குள்ளாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த விபத்து இன்று, அதிகாலை 5:20 மணியளவில் உத்தரகாண்ட் மாநிலம் – கவுரிகுந்த் அருகே இடம்பெற்றுள்ளது.

இந்த உலங்குவானுர்தி விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்ததாக முன்னர் தகவல் வெளியான நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.

உலங்குவானுர்தியில் இருந்த பயணிகள் உத்தரகண்ட், உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளைக் கருத்தில் கொண்டு, தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படை குழுக்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக உத்தரகண்ட் சிவில் விமானப் போக்குவரத்து மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இந்த உலங்குவானுர்தியில் பயணித்த அனைவரும் உயிரிழந்திருக்கலாம் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

https://www.youtube.com/embed/bTdmLd9cLu0

NO COMMENTS

Exit mobile version