Home இந்தியா இந்தியாவின் குஜராத்தில் நிலநடுக்கம்

இந்தியாவின் குஜராத்தில் நிலநடுக்கம்

0

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் மிதமான நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் இன்று (26) அதிகாலை இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் (NCS) தெரிவித்துள்ளது.

அதன்படி, அதிகாலை 4.30 மணியளவில் ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக இந்த நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 மேலதிக தொழில்நுட்ப விபரங்கள் 

நிலநடுக்கத்தின் ஆழம் மற்றும் மையம் குறித்தசேகரிக்கப்பட்டு வருவதுடன் நில நடுக்க நிலைமையை உள்ளூர் நிர்வாகம்  தொடர்ந்து கண்காணித்து வருகிறதாக குறிப்பிடப்படுகின்றது.

அதிகாலை வேளையில் ஏற்பட்ட இந்த நில அதிர்வினால் மக்கள் சற்று அச்சமடைந்த போதிலும், இதுவரை உயிர்ச் சேதங்களோ அல்லது பொருட்சேதங்களோ ஏற்பட்டதாக உத்தியோகபூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

குஜராத்தின் கட்ச் பிராந்தியமானது அதிக நிலநடுக்க அபாயம் கொண்ட மண்டலமாக வகைப்படுத்தப்பட்டுள்ளதுடன், இப்பகுதியில் அடிக்கடி சிறியளவிலான நில அதிர்வுகள் வழமையாக ஏற்படுவது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version