நுவரெலியா – அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆட்லோ தோட்டத்தில் உள்ள ஆற்றில் இருந்து, முதியவர் ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர், 74 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தை ஆவார்.
இவர் நேற்று மாலை 7 மணியளவில் தனது வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால், உறவினர்களும் தோட்ட மக்களும் இணைந்து அவரைத் தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
தேடுதலின் போது, வீட்டிலிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவிலுள்ள ஆற்றில் அவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.
காணாமல் போயிருந்த முதியவர் ஆற்றில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்து அக்கரப்பத்தனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
