Home இலங்கை காணாமல்போன விசேட வைத்தியர் சடலமாக மீட்பு! காட்டில் கண்டுபிடிக்கப்பட்ட கார்

காணாமல்போன விசேட வைத்தியர் சடலமாக மீட்பு! காட்டில் கண்டுபிடிக்கப்பட்ட கார்

0
image

 

காணாமல் போன நிலையில் தேடப்பட்டு வந்த பதுளை போதனா வைத்தியசாலையின் விசேட வைத்தியர் ஒருவர், சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

குறித்த வைத்தியர் நேற்று (23) காலை வழமைபோன்று கடமையில் ஈடுபட்டிருந்த நிலையில், அதன் பின்னர் அவரைக் காணவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

வைத்தியரைத் தேடும் நடவடிக்கைகளின் போது, அவரது கார் மஹியங்கனை திசையை நோக்கிப் பயணித்தமை மீகஹகிவுல பகுதியில் பொருத்தப்பட்டிருந்த CCTV கமெராவில் பதிவாகியுள்ளமை தெரியவந்துள்ளது.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளில், பதுளை–மஹியங்கனை பிரதான வீதியின் 17ஆம் கட்டை, மாப்பாக்கடவெவ பகுதியில் வைத்து வைத்தியரின் கார் நேற்று இரவு கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வைத்தியரின் கார் கண்டெடுக்கப்பட்ட இடம் யானைகள் நிறைந்த காடு என்றும், வனவிலங்கு அதிகாரிகளும் அழைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  

இதற்கமைய, காணாமல் போன வைத்தியரைத் தேடும் நோக்கில் இன்று (24) குறித்த பகுதியில் பொலிஸார், குற்றச் சம்பவ இடங்களை ஆராயும் தடயவியல் அதிகாரிகள் மற்றும் இராணுவத்தினர் இணைந்து கூட்டுத் தேடுதல் நடவடிக்கையை முன்னெத்தனர்.

இந்நிலையில் அவரது சடலம் மஹியங்கனை – மாப்பாக்கடவெவ பகுதிக்கு அருகிலுள்ள பாறையொன்றில் வைத்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Source: https://samugammedia.com/missing-specialist-doctor-found-dead-car-discovered-in-the-forest-1787550802

NO COMMENTS

Exit mobile version