முஸ்லீம் எயிட் (Muslim Aid CAR-LIDA) திட்டத்தின் கீழ், திருகோணமலை மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் (DATC), “காலநிலை மாற்றத்தைத் தாங்கக்கூடிய திறன் கொண்ட நவீன விவசாயம் (Smart Agriculture), பயிர்ச்செய்கை முறைகள் மற்றும் விவசாய இடர் மதிப்பீடு” தொடர்பான ஒரு நாள் பயிற்சி நிகழ்ச்சி வெற்றிகரமாக நேற்று நடைபெற்றது.
இந் நிகழ்வில் மாவட்ட மற்றும் மாகாண விவசாயத் திணைக்களங்களின் அதிகாரிகள், MASL திட்டத் தலைவர் (HoP), திட்டமிடல் பிரிவுத் தலைவர் (HoP – Planning), ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் தொடர்புடைய களப்பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
திட்டப் பகுதிகளில் வசிக்கும் விவசாய சமூகங்களிடையே காலநிலை மாற்றத்தைத் தாங்கக்கூடிய நிலையான வாழ்வாதாரங்களை மேம்படுத்துவதற்கு ஆதரவளிக்கும் நோக்கில், இப்பயிற்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
பயிற்சியின் போது, காலநிலை மாற்றத்துக்கு ஏற்ப மாற்றியமைக்கக்கூடிய நவீன விவசாய நடைமுறைகள், பயிர்ச்செய்கை முறைகள் மற்றும் விவசாய இடர் மதிப்பீடு தொடர்பான பங்கேற்பாளர்களின் அறிவு மற்றும் திறன்களை வலுப்படுத்துவதில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டது.
Source: https://samugammedia.com/training-on-modern-agriculture-resilient-to-climate-change-1789622759
