Home இலங்கை கிண்ணியா பிரதான வீதியில் உள்ள உணவகங்களில் திடீர் பரிசோதனை

கிண்ணியா பிரதான வீதியில் உள்ள உணவகங்களில் திடீர் பரிசோதனை

0
image

கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எம்.எம். அஜித் தலைமையில், பொதுச் சுகாதார பரிசோதகர்களுடன் இணைந்து இன்று (10) இந்த திடீர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, உணவகங்களில் உணவு கையாளப்படும் விதம், கழிவுகள் அகற்றப்படும் முறை மற்றும் கழிவுநீர் முறையாக வெளியேற்றப்படுகிறதா என்பது தொடர்பில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

இதில், சுகாதார நடைமுறைகளை முறையாகப் பின்பற்றுவது தொடர்பில் உணவக உரிமையாளர்களுக்கு அதிகாரிகளால் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.

மேலும், பொதுமக்களின் நுகர்வுக்கு பொருத்தமற்ற நிலையில் காணப்பட்ட சில உணவுப் பொருட்களை அகற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

உணவகங்களில் சுகாதாரமான முறையில் உணவுகளை தயாரித்து, பொதுமக்களுக்கு பாதுகாப்பான உணவுகளை வழங்குவதை உறுதி செய்யும் வகையில் இவ்வாறான பரிசோதனைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: https://samugammedia.com/surprise-inspection-of-restaurants-on-kinniya-main-road-1786364881

NO COMMENTS

Exit mobile version