Home இலங்கை கிரிக்கெட் மைதானத்திலேயே சுருண்டு விழுந்து மரணமடைந்த வீரர் – இலங்கையில் சோகம்

கிரிக்கெட் மைதானத்திலேயே சுருண்டு விழுந்து மரணமடைந்த வீரர் – இலங்கையில் சோகம்

0
image

பேருவளை, சீனன்கோட்டை பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் பழைய மாணவர்களுக்கு இடையில் நேற்று (5) நடைபெற்ற சிநேகபூர்வ கிரிக்கெட் போட்டியின் போது, விளையாடிக்கொண்டிருந்த வீரர் ஒருவர் ஆடுகளத்திலேயே சரிந்து விழுந்து துரதிர்ஷ்டவசமாக  உயிரிழந்துள்ளார்

உயிரிழந்தவர் பேருவளை பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய ஸுல்பிகார் (Zulfi) ஒருவர் ஆவார்.

பழைய மாணவர்களிடையேயான உறவை வளர்க்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த கிரிக்கெட் போட்டியில் அவர் விளையாடிக்கொண்டிருந்த போது, திடீரென ஆடுகளத்தின் நடுவே சரிந்து விழுந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து அங்கிருந்தவர்கள் உடனடியாக செயற்பட்டு அவரை பேருவளை பிரதேச மருத்துவமனையில் அனுமதிப்பதற்கு நடவடிக்கை எடுத்தனர்.

எனினும், மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போதே அவர் உயிரிழந்திருந்ததாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்துள்ளன.

திடீர் மாரடைப்பு இந்த மரணத்திற்குக் காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதுடன், இந்த சம்பவம் தொடர்பாக பேருவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

தற்போது நிலவும் கடும் வெயில் காலத்தில் மைதானங்களில் விளையாடும் வீரர்கள் தங்களின் உடல்நலத்தில் மிகத் தீவிர கவனம் செலுத்த வேண்டும். விளையாட்டின் போது போதிய அளவு நீர் அருந்தி, உடலை எப்போதும் நீரேற்றத்துடன் (Hydrated) வைத்திருப்பது கட்டாயமாகும்.

Source: https://samugammedia.com/player-who-rolled-and-fell-to-death-on-the-cricket-field—mourning-in-sri-lanka-1783313199

NO COMMENTS

Exit mobile version