Home இலங்கை அரசியல் போர்க்குற்றம் தொடர்பில் இலங்கைக்கு எதிராக ஒன்று சேரும் உலக நாடுகள் – செய்திகளின் தொகுப்பு

போர்க்குற்றம் தொடர்பில் இலங்கைக்கு எதிராக ஒன்று சேரும் உலக நாடுகள் – செய்திகளின் தொகுப்பு

0

போர்க்குற்றம் புரிந்ததாகக் கண்டறியப்பட்ட இலங்கை இராணுவத்தின் (Sri Lankan
Army) தளபதிகளுக்கு எதிராக சர்வதேச அதிகார வரம்பிற்குட்பட்ட நாடுகள் மற்றும்
சர்வதேச நீதிமன்றங்களில் வழக்குத் தாக்கல் செய்வதற்கு பல நாடுகள் தற்போது
இணைந்து செயற்பட்டு வருவதாக இலங்கையின் நாடாளுமன்றக் குழு தெரிவித்துள்ளது.

இலங்கையின் வெளிவிவகார அமைச்சினால், வெளிநாடுகளின் குற்றச்சாட்டுக்கள்
நிராகரிக்கப்பட்ட போதிலும், இராணுவத் தலைவர்கள் மற்றும் இலங்கையின் இராணுவ
அதிகாரிகளுக்கு எதிராக தொடர்ச்சியாக ஆதாரங்களை சேகரித்து வருவதாக அண்மையில்
நாடாளுமன்றத்தில் கூடிய தேசியப் பாதுகாப்பு தொடர்பான துறைசார் கண்காணிப்புக்
குழு தகவல்களை வெளிப்படுத்தியுள்ளது.

இதன்படி, இலங்கை படை அதிகாரிகள் உலகின் எந்த நாட்டிலும் கைது செய்யப்படலாம்
என்பதோடு சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரலாம் எனவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான காலை நேர செய்திகளின் தொகுப்பு..

NO COMMENTS

Exit mobile version