Home இலங்கை கிரிந்தி ஓயாவில் நீரில் மூழ்கி 18 வயது பிக்கு உயிரிழப்பு

கிரிந்தி ஓயாவில் நீரில் மூழ்கி 18 வயது பிக்கு உயிரிழப்பு

0
image

வெல்லவாய – தெலுல்ல பகுதியில் உள்ள கிரிந்தி ஓயாவில் நீராடச் சென்ற 18 வயதுடைய இளம் பிக்கு ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

ஊவா குடாஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெலுல்ல பகுதியில் உள்ள வீடொன்றில் நடைபெற்ற அன்னதான நிகழ்வில் பங்கேற்பதற்காக சில பௌத்த பிக்குகள் சென்றுள்ளனர். 

இதன்போது, குறித்த பிக்குகள் கிரிந்தி ஓயாவுக்குச் சென்று நீராடியுள்ளனர். நீராடிக்கொண்டிருந்தபோது 18 வயதுடைய பிக்கு ஒருவர் எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கியுள்ளார்.

இதனையடுத்து, பிரதேசவாசிகள் அவரை மீட்டு தணமல்வில ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் ஊவா குடாஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 

Source: https://samugammedia.com/a-18-year-old-dies-after-drowning-in-the-river-during-leisure-time-1785131859

NO COMMENTS

Exit mobile version