மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையினால் இலவச அமர ஊர்தி சேவை வியாழக்கிழமை(10.09.2026) உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
களுதாவளையில் அமைந்துள்ள பிரதேச சபை வளாகத்தில் வைத்து இச்சேவை அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. பிரதேச சபையின் தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரத்தித் தவிசாளர் வசீகரன் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், உத்தியோகஸ்த்தர்கள் என பலரும் இதன்போது கலந்து கெண்டிருந்தனர்.
இன்றிலிருந்து தமது பிரதேச சபையினால் இவச சேவையாக செயற்படுத்தப்படவுள்ள இந்த அமர ஊர்தி சேவை இப்பிரதேசத்திலுள்ள மக்கள் மாத்திரமின்றி இலங்கையின் எப்பாகத்திலிருந்தாவது இந்த அமர ஊர்தி சேவை தேவைப்படுபவர்கள், 0652250075 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு இதனை இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம். என இதன்போது மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர் N;ம.வினோராஜ் தெரிவித்தார்.
Source: https://samugammedia.com/free-hearse-service-launched-in-manmunai-south-eruvil-pattu-1789033427
