Home முக்கியச் செய்திகள் யாழ் போதனா வைத்தியசாலை மீதான பொதுமக்களின் எண்ணம் தவறு! சத்தியமூர்த்தி சுட்டிக்காட்டு

யாழ் போதனா வைத்தியசாலை மீதான பொதுமக்களின் எண்ணம் தவறு! சத்தியமூர்த்தி சுட்டிக்காட்டு

0

யாழ். போதனா வைத்தியசாலை(Teaching Hospital Jaffna) மீதான பொதுமக்களின் எண்ணம் முற்றிலும் தவறானது என வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், வைத்தியசாலையில் குழப்பத்தை விளைவிக்கும் நோக்கத்துடன் சிலர் சமூக வலைத்தளங்களில் செயற்படுவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

ஐபிசி தமிழின் களம் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,“ மக்களிடையே வைத்தியதுறை தொடர்பில் சரியான புரிந்துணர்வு இல்லை. அவர்கள் புரிந்து கொள்ளும் முறை முற்றிலும் தவறு.

யாழ். போதனா வைத்தியசாலையில், வைத்தியதுறையின் மாணவர்கள் சத்திரசிகிச்சைகள் மேற்கொள்வதில்லை.

அதேபோன்று, வைத்திய சத்திர சிகிச்சை நிபுணர்களினால் அதிக அளவில் சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன.”என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், பொது மக்களிடையே ஏற்பட்டுள்ள குழப்பங்கள் குறித்து பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி பின்வருமாறு தெளிவுபடுத்தியுள்ளார்.

https://www.youtube.com/embed/xRrjHgRQddk

NO COMMENTS

Exit mobile version