Home இலங்கை கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் புதிய செயலாளராக என். மணிவண்ணன் கடமையேற்பு!

கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் புதிய செயலாளராக என். மணிவண்ணன் கடமையேற்பு!

0
image

கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள இலங்கை நிர்வாக சேவை விசேட தரத்தைச் சேர்ந்த என். மணிவண்ணன், இன்று (28) திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் அலுவலகத்தில் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

என். மணிவண்ணன் இதற்கு முன்னர் கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் (நிர்வாகம்), கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர், மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளர் மற்றும் மூதூர் பிரதேச செயலாளர் உள்ளிட்ட பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார்.

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர அவர்களினால் கடந்த சனிக்கிழமை (25) என். மணிவண்ணன் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், அவர் இன்று தனது புதிய பதவிக்கான கடமைகளை உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

Source: https://samugammedia.com/n-manivannan-assumes-office-as-the-new-secretary-of-the-eastern-province-ministry-of-education-1790588220

NO COMMENTS

Exit mobile version