கொழும்பு – தெமட்டகொடை, குப்பியாவத்தை மயானத்திற்கு அருகில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் நபரொருவர் காயமடைந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த இருவர் மீது, மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்துப் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Source: https://samugammedia.com/gunfire-near-the-cemetery-of-the-garbage-dump-one-person-injured-1784815397
