Home இலங்கை கூட்டுறவு பணியாளர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு மேலாக சம்பள உயர்வுகள் வழங்கப்படாது-வடமாகாண கூட்டுறவு ஊழியர் தொழிற் சங்க...

கூட்டுறவு பணியாளர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு மேலாக சம்பள உயர்வுகள் வழங்கப்படாது-வடமாகாண கூட்டுறவு ஊழியர் தொழிற் சங்க தலைவர்!

0
image

வடமாகாண கூட்டுறவு பணியாளர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு மேலாக சம்பள உயர்வுகள் வழங்கப்படாது, வடமாகாண கூட்டுறவு பணியாளர்கள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். எது சம்பள முரண்பாடுகள் தீர்த்து வைக்காது விடின் கூட்டுறவு நிகழ்வுகளை புறக்கணிப்போம் என வடமாகாண கூட்டுறவு ஊழியர் தொழிற் சங்க தலைவரான ஆர் செபஸ்தியான்பிள்ளை தெரிவித்தார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தனர்.

மேலும் தெரிவிக்கையில்

கூட்டுறவு சங்கங்கள் தரப்படுத்தப்பட்டு, ஊழியர்களுக்கான சம்பளங்கள் வகுப்பட்டன. ஆனாலும் இன்று வரை சம்பளங்கள் உயர்த்தப்படவில்லை.

கூட்டுறவு சங்களில் ஒன்று தொடக்கம் 17 வரையில் சம்பளங்கள் வகுப்பட்டுள்ளது. ஆனாலும் நீண்ட காலமாக சம்பள உயர்வுகள் வழங்கப்படவில்லை.

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலையில் குறைந்த சம்பளத்தை வைத்து குடும்ப வாழ்வாதரத்தை கொண்டு செல்ல முடியவில்லை 2025,2026 மற்றும் 2027ஆம் ஆண்டுகளில் அரச , தனியார் நிறுவனங்களின் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படுகிறது.

ஆனால் கூட்டுறவு பணியாளர்களின் சம்பளங்கள் அதிகரிக்கப்படவில்லை. எமது சம்பளங்கள் அதிகரிக்க வேண்டும். எமது சம்பள பாகுபாட்டை எதிர்காலத்தில் சம்பள பிரச்சனையை தீர்த்துக்கொண்டாலே எமது பணியாளர்கள் தொடர்ந்து பணியாற்றுவார்கள்.

எங்களுடைய சம்பள பாதிப்புக்கள் தீர்த்து வைக்கப்படாது விடின், எமது நிறுவனத்தின் செயற்பாடுகளை பாதிக்காது, கூட்டுறவு பணியாளர்கள், கூட்டுறவு சார்ந்த நிகழ்வுகளை புறக்கணித்து எதிர்ப்பை காட்டுவோம்.

சதோசா நிறுவனத்தின் மேல் அராசங்கம் கொண்டுள்ள கவனம் கூட்டுறவு சங்கங்கள் மேல் காட்டவில்லை. இதனால், சங்கங்கள் மூடப்பட கூடிய நிலைமைகள் காணப்படுகின்றன 

வடக்கில் 8 ஆயிரத்திற்கும் அதிகமான பணியாளர்கள் உள்ளனர். இருந்தும் அரசாங்கம் எம் மீது கரிசானை காட்டவில்லை.

எனவே எமது பிணக்குகளை துறைசார்ந்த நிபுணர்களுடன் கலந்துரையாடி தீர்வினை பெற்றுதர வேண்டும் என தெரிவித்தா்ர்.

Source: https://samugammedia.com/–4———–1781775157

NO COMMENTS

Exit mobile version