Home இலங்கை கௌரி சங்கரி தவராசாவின் 5ஆம் ஆண்டு நினைவு: வாணர் பாலத்தில் சூரிய ஒளி விளக்குகள் பொருத்தும்...

கௌரி சங்கரி தவராசாவின் 5ஆம் ஆண்டு நினைவு: வாணர் பாலத்தில் சூரிய ஒளி விளக்குகள் பொருத்தும் திட்டம்

0
image

மறைந்த கௌரி சங்கரி தவராசாவின் 5ஆம் ஆண்டு நினைவை முன்னிட்டு, கௌரி சங்கரி தவராசா ஞாபகார்த்த அறக்கட்டளையின் சார்பில் சிறப்புச் சமூகப் பணித் திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

இதன் ஒரு பகுதியாக, புங்குடுதீவையும் வேலணைத் தீவையும் இணைக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க வாணர் பாலத்தில், இரவு வேளைகளில் பயணிக்கும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சூரிய ஒளி விளக்குகள் பொருத்தும் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்த நிகழ்வு இன்று (22) காலை 11 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதுடன், ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசாவும் இதில் கலந்துகொள்ளவுள்ளார்.

பாலத்தைப் பயன்படுத்தும் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பையும் நலனையும் கருத்திற்கொண்டு இச்சமூகப் பணித் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வாணர் பாலத்தில் இரவு நேரப் பயணத்துக்கு வெளிச்ச வசதி ஏற்படுத்தப்படுவதன் மூலம், பொதுமக்களின் பாதுகாப்பு மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நடவடிக்கைக்கு அப்பகுதி பொதுமக்கள் வரவேற்பும் பாராட்டும் தெரிவித்துள்ளதுடன், இரவு நேரப் பயணங்களுக்கு இந்தத் திட்டம் பெரிதும் பயனளிக்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.

Source: https://samugammedia.com/gauri-sankari-thavarasas-5th-death-anniversary-plan-to-install-solar-lights-at-vanar-school-1787372736

NO COMMENTS

Exit mobile version