Home இலங்கை சகோதரியின் மகனால் கொடூரமாக கொல்லப்பட்ட வயோதிபர்; கம்பளையில் பயங்கரம்

சகோதரியின் மகனால் கொடூரமாக கொல்லப்பட்ட வயோதிபர்; கம்பளையில் பயங்கரம்

0
image

கம்பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கீரப்பனை பகுதியில் உள்ள வீடொன்றில் 52 வயதுடைய நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கீரப்பனை பகுதியைச் சேர்ந்த குறித்த நபர் காயமடைந்து கீழே விழுந்து கிடப்பதாக கம்பளை பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலையடுத்து, பொலிஸார் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளனர்.

பின்னர் காயமடைந்த நிலையில் காணப்பட்ட நபர் கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

முதற்கட்ட பொலிஸ் விசாரணைகளில், உயிரிழந்த நபருக்கும் அவரது சகோதரியின் மகனுக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு முற்றியதையடுத்து, சகோதரியின் மகன் கத்தியால் தாக்கியதில் இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் 43 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

 

Source: https://samugammedia.com/elderly-man-brutally-killed-by-his-sisters-son-terrifying-in-the-blanket-1785297994

NO COMMENTS

Exit mobile version