Home இலங்கை சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட டிப்பர்கள், உழவு இயந்திரங்கள் பறிமுதல்

சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட டிப்பர்கள், உழவு இயந்திரங்கள் பறிமுதல்

0
image

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் அனுமதியின்றி சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நான்கு வாகனங்கள் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தர்மபுரம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், நேற்று  (15) கல்லாறு பகுதியில் அரச காட்டுக்குள் அனுமதியின்றி மணல் அகழ்வில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இரண்டு டிப்பர் வாகனங்கள் கைப்பற்றப்பட்டன.

அத்துடன், தர்மபுரம் நெத்திலி ஆறு பகுதியில் உரிய அனுமதிப்பத்திரம் இன்றி மணல் அகழ்வில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இரண்டு உழவு இயந்திரங்களும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சம்பவங்களுடன் தொடர்புடைய சாரதிகள் கைது செய்யப்பட்டு விசாரணைகளின் பின்னர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் மற்றும் ஏனைய தடயப் பொருட்களை கிளிநொச்சி நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தர்மபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். திசாநாயக தெரிவித்துள்ளார்.

Source: https://samugammedia.com/tippers-and-tractors-involved-in-illegal-sand-mining-seized-1789524071

NO COMMENTS

Exit mobile version