Home இலங்கை சமித்புர சத்து’ கைது மட்டக்குளியில் கைத்துப்பாக்கி, 12 தோட்டாக்கள் மீட்பு

சமித்புர சத்து’ கைது மட்டக்குளியில் கைத்துப்பாக்கி, 12 தோட்டாக்கள் மீட்பு

0
image

கடந்த 18 ஆம் திகதி ஓமானில் வைத்து கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட ‘சமித்புர சத்து’ என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் பல தகவல்கள் வௌிவந்துள்ளன. 

இதற்கமைய, வெளிநாடொன்றிலிருந்து இந்நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு தயாரிப்பிலான கைத்துப்பாக்கி ஒன்று மற்றும் 12 தோட்டாக்கள் மட்டக்குளி பகுதியில் உள்ள வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

கடந்த தினம் சமித்புர சத்து எனப்படுபவர் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டதன் பின்னர், மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டார். 

கொழும்பு 15, மட்டக்குளி, சமித்புர பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய திமுத்து சதுரங்க பெரேரா, 2025 ஆம் ஆண்டு மார்ச் 22 ஆம் திகதி போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி ஓமானுக்குத் தப்பிச் சென்றிருந்தார். 

அவர் கணேமுல்ல சஞ்சீவ கொலையின் சந்தேக நபர்களில் ஒருவராவார் என்பதுடன், நாட்டில் இடம்பெற்ற பல குற்றச் செயல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியாகவும் கருதப்படுகிறார்.

Source: https://samugammedia.com/samithpura-sathu-arrested-pistol-and-12-rounds-of-ammunition-recovered-in-mattakkuliya-1787200513

NO COMMENTS

Exit mobile version