கனடாவில்(Canada) வாழும் கனேடிய மக்களை நாட்டை விட்டு வெளியேறுமாறு காலிஸ்தானியர்கள் தெரித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கனடாவில் காலிஸ்தானி இயக்கத்தின் மையமான பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள சர்ரேயில் நடந்த காலிஸ்தானி நிகழ்வில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளன.
இந்தியா – கனடா உறவு
இதன்போது பதிவு செய்யப்பட்ட காணொளியில், “இது கனடா, எங்களின் சொந்த நாடு. நீங்கள்(கனேடியரகள்) திரும்பி செல்லுங்கள்.
Khalistanis march around Surrey BC and claim “we are the owners of Canada” and “white people should go back to Europe and Israel”.
How are we allowing these r*tards to shape our foreign policy? pic.twitter.com/9VmEnrVlGP— Daniel Bordman (@DanielBordmanOG) November 13, 2024
வெள்ளையர்கள் மீண்டும் ஐரோப்பா, இங்கிலாந்து மற்றும் இஸ்ரேலுக்கு செல்ல வேண்டும். இது நம் நாடு, திரும்பி செல்லுங்கள். நாங்கள் தான் இந்த நாட்டின் உரிமையாளர்,” என
காலிஸ்தான் ஆதரவாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, முதன்முறையாக, கனடாவில் காலிஸ்தானிக்கு ஆதரவான கூறுகள் இருப்பதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டதுடன்
அவர்கள் “ஒட்டுமொத்த சீக்கிய சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை” என்று வலியுறுத்தி இருந்தார்.
இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் இந்த சர்ச்சையை ஏற்படுத்திய காலிஸ்தானியர்களின் காணொளி வெளியாகியுள்ளது.
காலிஸ்தான் அமைப்பின் உறுப்பினரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்ட பின்னணியில், இந்தியா மற்றும் கனடா உயர் அதிகாரிகள் பல குற்றச்சாட்டுகளைத் தெரிவித்து வந்ததால் இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.