Home முக்கியச் செய்திகள் சமிந்த விஜேசிறிக்கு சிறை தண்டனை

சமிந்த விஜேசிறிக்கு சிறை தண்டனை

0

பதுளை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறிக்கு, 2019ஆம் ஆண்டு பொலிஸ் அதிகாரிகளுடன் ஏற்பட்ட மோதல் தொடர்பான வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்டதை அடுத்து, பதுளை மேல் நீதிமன்றம் ஒன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

பண்டாரவளை வட்டாரப் பகுதிக்கு அருகில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தின் போது, பொலிஸ் அதிகாரிகளைச் சட்டவிரோதமாகத் தடுத்து நிறுத்தியமை, உடலுக்குக் காயம் ஏற்படுத்தும் வகையில் தாக்கியமை மற்றும் குற்றவியல் மிரட்டல் விடுத்தமை ஆகிய குற்றச்சாட்டுகள் மேல் நீதிமன்றத்தால் நிரூபிக்கப்பட்டுள்ளன.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரின் வாகனத்தை பொலிஸ் ஜீப் ஒன்று முந்திச் சென்றதைத் தொடர்ந்து ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றி, பொலிஸ் அதிகாரிகளைத் தாக்கும் மற்றும் அச்சுறுத்தும் அளவுக்குச் சென்றுள்ளதாக வழக்கு விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: https://www.tamilmirror.lk/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88/150-380558

NO COMMENTS

Exit mobile version