Home இலங்கை “செம்மணிக்கு நீதி வேண்டும்” யாழில் கத்தோலிக்க குருமார்கள் அமைதிவழிப் போராட்டம்

“செம்மணிக்கு நீதி வேண்டும்” யாழில் கத்தோலிக்க குருமார்கள் அமைதிவழிப் போராட்டம்

0
image

யாழ்ப்பாணம் – செம்மணி சிந்துபாத்தியில் புதைக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கோரி யாழில் இன்று அமைதிவழிப் போராட்டம் இடம்பெற்றது.

யாழ். கத்தோலிக்க மறைவாட்ட நீதி சமாதான ஆணைக்குழுவின் ஒழுங்குபடுத்தலில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அரியாலை புனித யுதாதேய சுருபம் முன்பாக இன்று காலை 10 மணிக்கு ஒன்றுகூடிய மறைமாவட்டத்தைச் சேர்ந்த கத்தோலிக்க குருமாரும், துறவறத்தினரும் அமைதியாக செம்மணி சிந்துபாத்தி மயானம் வரையில் பேரணியாகச் சென்று நீதிகோரிக்கை விடுத்தனர்.

பேரணியில் பங்கேற்றவர்கள், செம்மணிக்கு நீதி வேண்டும், சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் மௌனம் அல்ல நீதியே தேவை, உண்மைகள் மறைக்கப்படக்கூடாது போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை தாங்கியிருந்தனர்.

 

Source: https://samugammedia.com/justice-for-semmanikku—catholic-priests-in-jaffna-launch-peaceful-protest-1785394449

NO COMMENTS

Exit mobile version