Home இலங்கை ஜனாதிபதியுடனான சந்திப்பு: முழுமையான காணொளிகளை வழங்க சட்டத்தரணிகள் சங்கத்துக்கு உறுதி

ஜனாதிபதியுடனான சந்திப்பு: முழுமையான காணொளிகளை வழங்க சட்டத்தரணிகள் சங்கத்துக்கு உறுதி

0
image

கடந்த 12ஆம் திகதி ஜனாதிபதியுடன் நடைபெற்ற கூட்டத்தின் முழுமையான வீடியோ பதிவுகளை வழங்குமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் விடுத்த கோரிக்கைக்குப் பதிலளித்து ஜனாதிபதி செயலகம் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. 

ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் பிரசன்ன பெரேராவின் கையொப்பத்துடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ள இக்கடிதத்தில், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவரால் செய்யப்பட்ட உத்தியோகபூர்வ உரைகளின் தொகுக்கப்படாத வீடியோ பதிவுகள் ஓகஸ்ட் 12ஆம் திகதியன்றே அச்சங்கத்திடம் வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

கூட்டத்தில் கலந்துகொண்ட ஏனைய தரப்பினரின் கருத்துரைகள் மற்றும் கருத்துப் பரிமாற்றங்கள் அடங்கிய பதிவுகள், உரிய உத்தியோகபூர்வ நடைமுறைகளுக்கு அமைவாக எதிர்காலத்தில் கூடிய விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். 

மேலும், குறித்த வீடியோ காட்சிகளை முறைப்படியும் சரியான முறையிலும் வழங்குவதற்கு ஜனாதிபதி செயலகத்தின் முழுமையான ஒத்துழைப்பு எப்போதும் கிடைக்கும் என்றும் அக்கடிதத்தில் மேலும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

 

Source: https://samugammedia.com/meeting-with-the-president-assured-the-bar-association-to-provide-full-videos-1786789937

NO COMMENTS

Exit mobile version