Home இலங்கை ஜூலை மாதத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்குச் சென்ற இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

ஜூலை மாதத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்குச் சென்ற இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

0
image

இந்த ஆண்டின் ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில், ஜூலை மாதத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காகச் சென்ற இலங்கையர்களின் எண்ணிக்கை 4.84 சதவீதம் அதிகரித்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

இதன்படி, 2026 ஜூலை மாதத்தில் மொத்தம் 25,622 இலங்கையர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காகப் பயணித்துள்ளனர். இது இந்த ஆண்டில் ஒரே மாதத்தில் பதிவான அதிகபட்ச எண்ணிக்கையாகும் என பணியகம் குறிப்பிட்டுள்ளது.

ஜூன் மாதத்தில் 24,440 பேர் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காகச் சென்றிருந்த நிலையில், ஜூலையில் அந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.

இஸ்ரேல், தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுடன் அரசாங்கம் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் காரணமாக, குறித்த நாடுகளில் வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்கான இலங்கையர்களின் ஆர்வம் அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

இதன்படி, ஜூலை மாதத்தில் இஸ்ரேலுக்கு 2,521 பேரும், தென் கொரியாவுக்கு 1,618 பேரும், ஜப்பானுக்கு 79 பேரும் வேலைவாய்ப்புகளுக்காகச் சென்றுள்ளனர்.

மேலும், ஜப்பானில் உற்பத்தி, கட்டுமானம், செவிலியர் பராமரிப்பு மற்றும் விவசாயத் துறைகளில் வேலைவாய்ப்புகளைப் பெற்ற 14 இளைஞர், யுவதிகளுக்கு நேற்று (03) இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் வைத்து விமானப் பயணச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன.

இதேவேளை, 2026 ஜனவரி முதல் ஜூன் வரையான ஆறு மாத காலப்பகுதியில் புலம்பெயர் தொழிலாளர்களால் 4.6 பில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு வருவாய் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: https://samugammedia.com/increase-in-the-number-of-sri-lankans-going-abroad-for-work-in-july-1785839581

NO COMMENTS

Exit mobile version