Home இலங்கை டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு படகுகள் மற்றும் வலைகள் வழங்கி வைப்பு!

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு படகுகள் மற்றும் வலைகள் வழங்கி வைப்பு!

0
image

 கடந்த வருடம் ஏற்பட்ட டித்வா புயலால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்ட மீனவர்களுக்கு படகுகள் மற்றும் வலைகள் வழங்கும் நிகழ்வு நேற்றைய தினம் காரைநகர் சீ நோர் படகு தொழிற்சாலை வளாகத்தில்  நடைபெற்றது.

 

இந் நிகழ்வில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள் கலந்து கொண்டு மீனவர்களுக்கான படகுகள் மற்றும் வலைகளை வழங்கி வைத்தார்.  

இதன்போது முதலாம் கட்டமாக ரூபா 1.800 மில்லியன் பெறுமதியான 32 வலைகளும், ரூபா 8.640 மில்லியன் பெறுமதியான 18 படகுகளும் வழங்கி வைக்கப்பட்டன. 

இதில், தலா ரூபா 480,000.00 பெறுமதியான 18 படகுகளில், யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கு  03 படகுகளும் ( நெடுந்தீவிற்கு  02 படகுகளும், காரைநகருக்கு 01 படகுகள்), முல்லைத்தீவு மாவட்டத்திற்கு 13 படகுகளும்,  மன்னார் மாவட்டத்திற்கு 02 படகுகளுமாக  வழங்கி வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட மேலதிக  அரசாங்க அதிபர் திரு.க.சிவகரன்,  காரைநகர் பிரதேச செயலாளர் நிரஞ்சனா நவரத்தினம்,  காரைநகர் சீ நோர் படகு தொழிற்சாலை பணிப்பாளர் திரு.றோகன, சீ நோர் படகுதிருத்தும் நிறுவனத்தின் தலைவர் திரு. வசந்தமானபெரும,  கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் யாழ். மாவட்ட உதவிப் பணிப்பாளர் திரு. அகிலன், முல்லைத்தீவு மாவட்ட உதவிப் பணிப்பாளர் திரு. சுதாகர், மன்னார் மாவட்ட உதவிப் பணிப்பாளர் திரு. ரமேஸ்கண்ணா,  திணைக்கள உத்தியோகத்தர்கள்  மற்றும் பயனாளிகள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டிருந்தனர்.

Source: https://samugammedia.com/providing-boats-and-nets-to-fishermen-affected-by-cyclone-titva-1781865669

NO COMMENTS

Exit mobile version