Home இலங்கை யானை தாக்கிப் பெண் ஒருவர் பரிதாப மரணம்

யானை தாக்கிப் பெண் ஒருவர் பரிதாப மரணம்

0
image

பொலன்னறுவை, அரலகங்வில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீரலந்த பகுதியில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அரலகங்வில, ருஹுணுகம பகுதியைச் சேர்ந்த 66 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மேற்படி பெண் நேற்று அதிகாலை தனது வீட்டின் முன்பாக நின்றுகொண்டிருந்த வேளையிலேயே காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார் என்று பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் அரலகங்வில பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Source: https://samugammedia.com/woman-dies-tragically-after-being-attacked-by-an-elephant-1789697900

NO COMMENTS

Exit mobile version