Home இலங்கை டுபாயில் இருந்து நாடுகடத்தப்பட்ட ‘கொண்ட ரஞ்சி’ இலங்கையில் கைது

டுபாயில் இருந்து நாடுகடத்தப்பட்ட ‘கொண்ட ரஞ்சி’ இலங்கையில் கைது

0
image

டுபாயில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டதாகக் கூறப்படும் பாதாள உலகக் குழு உறுப்பினரான ரஞ்சித் குமார் எனப்படும் ‘கொண்ட ரஞ்சி’, குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் இன்று (09) கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் இன்று காலை 8.00 மணியளவில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த நிலையில், அங்கு வைத்து குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

‘கொண்ட ரஞ்சி’ கடந்த ஜனவரி 09ஆம் திகதி இத்தாலிக்குத் தப்பிச் செல்ல முயன்றபோது டுபாய் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

அவருடன் அவரது மனைவி மற்றும் குழந்தைகளும் அப்போது கைது செய்யப்பட்டிருந்த போதிலும், பின்னர் அவர்கள் இருவரும் விடுவிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் ஒருங்கிணைப்புச் செயலாளர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலும் ‘கொண்ட ரஞ்சி’ பொலிஸாரால் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: https://samugammedia.com/kond-ranjith-smuggled-from-dubai-arrested-in-sri-lanka-1788926127

NO COMMENTS

Exit mobile version