Home இலங்கை டெங்கு மரணங்கள் 31 ஆக உயர்வு – 51,049 நோயாளர்கள் பதிவு

டெங்கு மரணங்கள் 31 ஆக உயர்வு – 51,049 நோயாளர்கள் பதிவு

0
image

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் நாட்டில் பதிவாகியுள்ள டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஜூன் 25 மற்றும் 26 ஆகிய இரு தினங்களின் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, மொத்தமாக பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 51,049 ஆக அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனுடன் தொடர்புடையதாக, டெங்கு மரணங்களின் வீதம் மொத்த நோயாளர்களில் 0.06% ஆக காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் மாதத்தில் மட்டும் 17,208 புதிய டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

மேலும், மேல், தெற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலேயே அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

அதேபோல், தற்போது 124 சுகாதார வைத்திய அதிகாரி (MOH) பிரிவுகள் அதிக அவதானம் தேவைப்படும் பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: https://samugammedia.com/dengue-deaths-rise-to-31–51049-cases-recorded-1782623268

NO COMMENTS

Exit mobile version