Home இலங்கை தகராறு முற்றியதில் விபரீதம்; மாமனாரை குத்திக் கொன்ற மருமகன் தலைமறைவு

தகராறு முற்றியதில் விபரீதம்; மாமனாரை குத்திக் கொன்ற மருமகன் தலைமறைவு

0
image

மாத்தளை மாவட்டத்தில் லக்கல, தோரபிட்டிய பகுதியில் கூர்மையான ஆயுதத்தால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில்  ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மா ஓயா, கிராமம் 01 பகுதியைச் சேர்ந்தவ 78 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பலத்த காயங்களுடன் குறித்த நபர் விழுந்து கிடந்த நிலையில், அவரை வைத்தியசாலையில் அனுமதிப்பதற்காக பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டபோதும், அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

முதற்கட்ட விசாரணைகளின்படி, உயிரிழந்த நபருக்கும் அவரது மருமகனுக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு முற்றியதையடுத்து, மருமகன் இந்தத் தாக்குதலை மேற்கொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சம்பவத்தையடுத்து சந்தேகநபரான மருமகன் அப்பகுதியிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சந்தேகநபரைக் கைது செய்வதற்காக லக்கல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Source: https://samugammedia.com/disaster-struck-after-the-election-results-the-son-in-law-went-missing-after-stabbing-his-father-in-law-to-death-1786425213

NO COMMENTS

Exit mobile version