அசுவெசும (Aswesuma) நலன்புரித் திட்டத்தின் கீழ் தகுதியுடைய மக்களுக்கு கிடைக்க வேண்டிய நலன்புரி கொடுப்பனவுகள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தொழிலாளர் தேசிய முன்னணியின் உப தலைவரும் முன்னாள் பிரதேச சபை உறுப்பினருமான A.J. மெல்கம் தெரிவித்துள்ளார்.
தோட்டத் தொழிலாளர்கள் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட மக்களின் நலன்களுக்கு பாதிப்பை ஏற்படுத்திய அல்லது திட்டத்தைத் துஷ்பிரயோகம் செய்த அதிகாரிகள் தொடர்பில் சட்டம் தனது கடமையைச் செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
சட்ட நடவடிக்கைகள் நிறைவடைய காலதாமதம் ஏற்படக்கூடும் என்பதால், இதுவரை அசுவெசும கொடுப்பனவைப் பெற்றுக்கொள்ளாத தகுதியான மக்களுக்கு உரிய நிதியை உடனடி
யாக வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் A.J. மெல்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாகவும் அவர்களின் உரிமைகளுக்காகவும் சிவில் அமைப்புகளும், கற்றறிந்த இளைஞர் சமூகமும் முன்வந்து குரல் கொடுக்க வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
