Home இலங்கை தங்கம் விழுங்கிய பயணிகள்! ஸ்கான் பரிசோதனையில் உறுதி; காங்கேசன்துறையில் அதிர்ச்சி

தங்கம் விழுங்கிய பயணிகள்! ஸ்கான் பரிசோதனையில் உறுதி; காங்கேசன்துறையில் அதிர்ச்சி

0
image

காங்கேசன்துறை ஊடாக நாகைப்பட்டினம் செல்லத் தயாரான சமயம் சுங்க அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்ட 26 பயணிகளில் 17 பேருக்கு நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட ஸ்கானிங் பரிசோதனையில் நால்வர் உடம்புக்குள் தங்கத்தைக் கடத்த முயன்றமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

காங்கேசன்துறையில் இருந்து நாகைப்பட்டினம் பயணிக்கும் பயணிகள் பலர் தங்கம் கடத்துகின்றனர் என எழுந்த சந்தேகத்தின் பேரில் 26 பயணிகள் தடுத்து வைக்கப்பட்டு ஸ்கானிங் பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு வரப்பட்டனர்.

நாகைப்பட்டினம் – காங்கேசன்துறை இடையே இடம்பெறும் சிவகங்கை பயணிகள் கப்பல் சேவையில் நேற்றுக் காலை நாகைபட்டினத்தில் இருந்து 117 பயணிகள் காங்கேசன்துறையை வந்தடைந்தனர். அந்தக் கப்பலில் காங்கேசன்துறை துறைமுகத்தில் இருந்து 146 பயணிகள் நாகைப்பட்டினம் பயணிக்கக் காங்கேசன்துறை துறைமுகத்தில் காத்திருந்தனர்.

அந்த 146 பயணிகளில் 26 பேரைத் தொடர்ந்து பயணிக்கச் சுங்கத் திணைக்கள அதிகாரிகள் அனுமதிக்காது அவர்களைத் தடுத்து வைத்தனர். தடுக்கப்பட்டவர்களில் 17 இந்தியர்களும், 6 பெண்கள் உட்பட 9 இலங்கையரும் அடங்குகின்றனர்.

தடுத்து வைக்கப்பட்ட 26 பேரும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட பரிந்துரைக்கப்பட்டபோதும் 17 பேரே யாழ். போதனா வைத்தியசாலைக்கு அழைத்து வரப்பட்டு ஸ்கானிங் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இவர்களில் நால்வர் தங்கத்தை விழுங்கி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த 17 பேருக்கும் எஞ்சிய 9 பேருடன் இன்று மீண்டும் ஸ்கானிங் பரிசோதனை இடம்பெறவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Source: https://samugammedia.com/passengers-who-swallowed-gold-confirmed-in-scan-examination-shock-in-the-customs-department-1781749569

NO COMMENTS

Exit mobile version