தமிழ் தூது தனிநாயகம் அடிகளாரின் 46ஆவது நினைவு தினம் வவுனியாவின் நகர மத்தியில் அமைந்துள்ள அவரது சிலை அருகே இடம்பெற்று இருந்தது.
வவுனியா மாநகர சபையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தனிநாயகம் அடிகளாரின் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டதுடன், தனிநாயகம் அடிகளார் தொடர்பான சிறப்புரையும் இடம்பெற்றிருந்தது.
மாநகரசபை முதல்வர் சு.காண்டீபன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், மாநகரசபை உறுப்பினர்களான ரவீந்திரன், நீ.தர்மரட்னம், முன்னாள் செட்டிகுளம் பிரதேச சபையின் தவிசாளர் ஜெகதீஸ்வரன், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், தமிழ்மணி அகளங்கன், பொது அமைப்பை சார்ந்தவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
