Home இலங்கை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை: மேன்முறையீட்டுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை: மேன்முறையீட்டுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

0
image

2026ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள்களை மீளாய்வு செய்வதற்கான மேன்முறையீட்டு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் இன்று (07) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே வெளியிட்டுள்ள அறிவிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, செப்டம்பர் 7ஆம் திகதி முதல் செப்டம்பர் 21ஆம் திகதி வரை மேன்முறையீட்டு விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும்.

இந்த விண்ணப்பங்களை முழுமையாக இணையவழி முறையில் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும்.

இதற்காக, மாணவர் கல்வி கற்கும் பாடசாலையின் அதிபர், பாடசாலைக்கு வழங்கப்பட்டுள்ள Username மற்றும் Password ஆகியவற்றைப் பயன்படுத்தி, onlineexams.gov.lk இணையத்தளத்தின் SCHOOL LOGIN பகுதிக்குள் நுழைந்து விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

எனவே, மேன்முறையீடு செய்ய விரும்பும் மாணவர்களின் விண்ணப்பங்களை உரிய காலக்கெடுவுக்குள் பாடசாலை அதிபர்கள் ஊடாக சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Source: https://samugammedia.com/grade-5-scholarship-exam-appeals-can-be-applied-for-from-today-1788790032

NO COMMENTS

Exit mobile version