பயனர்களுக்கு மிகவும் திறமையான மற்றும் உயர்தர சேவையை வழங்கும் நோக்கில், மின்னணு வாகன வருமான வரி உத்தரவு பத்திர (eRL 2.0) தொகுதியை புதுப்பிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய, எதிர்வரும் செப்டம்பர் 25ஆம் திகதி வெள்ளிக்கிழமை முதல் செப்டம்பர் 28ஆம் திகதி திங்கட்கிழமை வரையான நான்கு நாட்களுக்கு, எட்டு மாகாணங்களில் மின்னணு வாகன வருமான வரி உத்தரவு பத்திரம் வழங்கும் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மத்திய, வடமத்திய, வடமேல், தென், கிழக்கு, வடக்கு, சப்ரகமுவ மற்றும் ஊவா ஆகிய மாகாணங்களில் குறித்த சேவைகள் தற்காலிகமாக இடம்பெறாது.
மின்னணு வாகன வருமான வரி உத்தரவு பத்திர தொகுதி புதுப்பிப்பு பணிகள் நிறைவடைந்ததையடுத்து, செப்டம்பர் 29ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் சேவைகள் மீண்டும் வழமைபோன்று வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தற்காலிக சேவை இடைநிறுத்தம் காரணமாக சேவை பெறுநர்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு உரிய மாகாண சபைகள் வருத்தம் தெரிவித்துள்ளன.
