Home இலங்கை தலைமன்னாரில் சட்டவிரோத சாம்பூ பக்கெட்டுகள் பறிமுதல்

தலைமன்னாரில் சட்டவிரோத சாம்பூ பக்கெட்டுகள் பறிமுதல்

0
image

சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 5,386 சாம்பூ பக்கெட்டுகள் தலைமன்னார், ஊருமலை கடற்கரைப் பகுதியில் இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

 

இலங்கை கடற்படையின் வடமத்திய கடற்படை கட்டளைக்குட்பட்ட ‘தம்மென்னா’ கப்பலுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், நேற்று (13) மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போதே இந்த சாம்பூ பக்கெட்டுகள் கண்டறியப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.

 

கடற்கரையில் ஒதுங்கியிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த பொருட்கள், சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

பறிமுதல் செய்யப்பட்ட 5,386 சாம்பூ பக்கெட்டுகள் மேலதிக விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

Source: https://samugammedia.com/illegal-shampoo-packets-seized-in-thalaimannar-1784014372

NO COMMENTS

Exit mobile version