Home இலங்கை ‘தித்வா’ பேரிடர் தயார்நிலை தொடர்பாக அரசுக்கு எதிரான அடிப்படை உரிமை மனு; விசாரணைக்கு உத்தரவு!

‘தித்வா’ பேரிடர் தயார்நிலை தொடர்பாக அரசுக்கு எதிரான அடிப்படை உரிமை மனு; விசாரணைக்கு உத்தரவு!

0
image

 

‘தித்வா’ புயலால் ஏற்பட்ட சேதங்களை குறைப்பதற்கான முன் தயார்நிலை நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசாங்கம் தவறியமை, மக்களின் அடிப்படை மனித உரிமைகளை மீறியதாக அறிவிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை எதிர்வரும் ஒக்டோபர் 30ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கண்டியைச் சேர்ந்த சட்டத்தரணி ஒருவரால் தாக்கல் செய்யப்பட்ட குறித்த மனு, நீதிபதிகளான ஜனக் டி சில்வா மற்றும் அச்சலா வெங்கப்புலி ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

மனுவில் முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த பின்னர், உச்ச நீதிமன்ற அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

குடியரசுத் தலைவர் சார்பில் சட்டமா அதிபர், அமைச்சரவை உறுப்பினர்கள் மற்றும் சில அமைச்சர்கள் உள்ளிட்டோர் இந்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

வானிலை ஆய்வு மையம் ‘தித்வா’ புயல் தொடர்பில் முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்திருந்த போதிலும், அதன் தாக்கத்தை குறைப்பதற்கும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் தேவையான திட்டமிடப்பட்ட நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளவில்லை என மனுதாரர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக மக்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக அறிவிக்குமாறு மனுதாரர் உச்ச நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய இயற்கை அனர்த்தங்களை எதிர்கொள்வதற்கும், அவற்றினால் ஏற்படும் சேதங்களை குறைப்பதற்கும் உரிய வழிகாட்டுதல்கள் மற்றும் செயற்பாட்டு திட்டங்களை அரசாங்கம் வெளியிட உத்தரவிடுமாறும் மனுவில் கோரப்பட்டுள்ளது.

Source: https://samugammedia.com/thitwa-basic-rights-petition-against-the-government-regarding-disaster-preparedness-ordered-for-inquiry-1784180247

NO COMMENTS

Exit mobile version