Home இலங்கை திருகோணமலையில் விபத்து: பேருந்தின் பின்னால் மோதிய மோட்டார் சைக்கிள் சாரதி படுகாயம்!

திருகோணமலையில் விபத்து: பேருந்தின் பின்னால் மோதிய மோட்டார் சைக்கிள் சாரதி படுகாயம்!

0
image

திருகோணமலை – அனுராதபுர வீதியின் ரொட்டவெவ பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் மோட்டார் சைக்கிள் சாரதி ஒருவர் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்விபத்து இன்று (16) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

திருகோணமலையிலிருந்து உறவுப்பொத்தான் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த தனியார் பேருந்துக்கு (Bus) பின்னால் அதே திசையில் மோட்டார் சைக்கிளும் பயணித்துள்ளது. இதன்போது, முன்னால் சென்ற பேருந்து திடீரென நிறுத்தப்பட்டமையினால், பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் பேருந்தின் பின்புறத்தில் பலமாக மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தின் தாக்கத்தினால் மோட்டார் சைக்கிள், பேருந்தின் பின்புறப் பகுதிக்குள் சொருகிய நிலையில்  காணப்பட்டது.

விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் சாரதி உடனடியாக மீட்கப்பட்டு திருகோணமலை பொது வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ரொட்டவெவ மற்றும் திருகோணமலை போக்குவரத்துப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Source: https://samugammedia.com/accident-in-trincomalee-motorcyclist-seriously-injured-after-crashing-into-the-back-of-a-bus-1781609499

NO COMMENTS

Exit mobile version