Home விளையாட்டு பாரிஸ் ஒலிம்பிக் 2024: இலங்கை வீராங்கனைக்கு மற்றுமொரு வாய்ப்பு

பாரிஸ் ஒலிம்பிக் 2024: இலங்கை வீராங்கனைக்கு மற்றுமொரு வாய்ப்பு

0

பாரிஸ் 2024 ஒலிம்பிக்கில் பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கையின் வீராங்கனையான தருஷி கருணாரத்ன (Tharushi Karunarathna)8 ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.

அவர் போட்டி தூரத்தை 2 நிமிடங்களும் 7 செக்கன்களிலும் நிறைவு செய்துள்ளார்.

பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டி நேற்று (02) நடைபெற்றிருந்த நிலையில் தருஷி ஆறாவது ஆரம்ப போட்டியில் பங்குபற்றினார்.

8வது இடம்

8வது இடத்தை பிடித்த தருஷி கருணாரத்னவிற்கு ஒலிம்பிக்கில் பின்பற்றப்படும் ரிபெஜேஜ் (repechage) முறைமைக்கு அமைய, மற்றுமொரு சந்தர்ப்பம் வழங்கப்படும்.

இதற்கமைய அவர் இன்று பிற்பகல் 2.40 அளவில் இடம்பெறவுள்ள மற்றுமொரு போட்டியில் பங்கேற்கவுள்ளார்.

அத்தோடு, இந்த ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக்கில் பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப் போட்டிக்குத் தகுதி பெற்ற வீராங்கனைகளில் தருஷியைத் தவிர மேலும் மூன்று வீராங்கனைகள் ஆசிய பிராந்தியத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.

அந்த வீராங்கனைகள் பலஸ்தீனம் (Palestine), குவைத் (Kuwait) மற்றும் பஹ்ரைன் ( Bahrain) நாட்டை சேர்ந்தவர்களெனவும் தருஷி கலந்து கொள்ளும் ஆறாவது ஆரம்ப போட்டியில் பங்கேற்ற ஒரே ஆசிய வீராங்கனை தருஷி கருணாரத்ன என்பது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version