Home இலங்கை நகை வாங்கும் கனவுக்கு தடையாகும் விலை அதிகரிப்பு – டொலரும் உயர்வு பாதையில்!

நகை வாங்கும் கனவுக்கு தடையாகும் விலை அதிகரிப்பு – டொலரும் உயர்வு பாதையில்!

0
image

இலங்கையில் இன்று (16) தங்கவிலை அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி இன்றைய தினம் 24 கரட் தங்கம் ஒரு பவுண் ஒன்று 2,000 ரூபாயால் அதிகரித்து, 394,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 4,000 ரூபாயால் அதிகரித்து, 362,500 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 49,250 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 45,313 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேவேளை, இலங்கை மத்திய வங்கி இன்று (16) வெளியிட்டுள்ள நாளாந்த நாணய மாற்று விகிதத்தின்படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 328.29 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதன் விற்பனை விலை இன்று 338.22 ரூபாவாக பதிவாகியிருந்தது.

அதேபோல், நேற்று (15) டொலரின் விற்பனை விலை 336.58 ரூபாவாக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Source: https://samugammedia.com/price-hike-is-a-hurdle-for-buying-jewelry—dollar-is-on-the-rise-1781593350

NO COMMENTS

Exit mobile version