Home இலங்கை நடைபாதையில் ஏற்பட்ட தடுமாற்றம் விபரீதமானது; லொறி சக்கரத்தில் சிக்கி பலியான உயிர்

நடைபாதையில் ஏற்பட்ட தடுமாற்றம் விபரீதமானது; லொறி சக்கரத்தில் சிக்கி பலியான உயிர்

0
image

கம்பளை – சிங்கபிட்டிய பகுதியில் பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 65 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் நடைபாதையில் பயணித்துக் கொண்டிருந்த போது, நடைபாதையில் இருந்த கால்வாயில் அவரது கால் சிக்கியதில் நிலைதடுமாறி பிரதான வீதியில் விழுந்துள்ளார்.

இதன்போது, அவ்வீதியில் பயணித்துக்கொண்டிருந்த லொறியின் பின்புற சக்கரத்தில் அவரது தலை மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் படுகாயமடைந்த 65 வயதுடைய நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பளை போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Source: https://samugammedia.com/the-stumble-on-the-footpath-was-tragic-a-life-was-lost-after-getting-caught-in-a-lorry-wheel-1785128839

NO COMMENTS

Exit mobile version