Home உலகம் தாய்வானில் 6.3 ரிக்டர் நிலநடுக்கம்…! தொடரும் அதிர்வுகளால் அச்சத்தில் மக்கள்

தாய்வானில் 6.3 ரிக்டர் நிலநடுக்கம்…! தொடரும் அதிர்வுகளால் அச்சத்தில் மக்கள்

0

தாய்வானில் (taiwan) தொடர்ச்சியாக ஏற்பட்டுவரும் சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் மக்கள் அச்சமடைந்து உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

தாய்வானின் கிழக்கு நகரான ஹூவாலியனில் மீண்டும் 6.3 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

நேற்றைய தினம் 5.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டிருந்தது. அந்த வகையில் இது இரண்டாவது நிலநடுக்கம் என தெரிவிக்கப்படுகின்றது.

ஆய்வாளர்கள் எச்சரிக்கை 

இந் நிலநடுக்கம் பூமியில் இருந்து 9.7 கிலோமீட்டர்கள் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.

ஒரே நாளில் ஏற்பட்ட இரண்டாவது நிலநடுக்கம் இது ஆகும். எனினும், இதில் எந்த பாதிப்பும் ஏற்பட்டதாக இதுவரை தகவல்கள் பதிவாகவில்லை.

மேலும், கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், மலைப்பகுதிகளில் மண்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் அந்நாட்டு வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

https://www.youtube.com/embed/4NZOt5jBM7w

Source: https://ibctamil.com/article/6-3-magnitude-earthquake-in-taiwan-1723777492

NO COMMENTS

Exit mobile version