அமெரிக்காவின் (America) கலிபோர்னியாவில் (California) கேமரான் ஏர்பார்க் (Cameron Airpark) என்ற சிறிய கிராமத்தில் அலுவலகத்திற்குச் செல்ல ஒவ்வொரு வீட்டிலும் விமானத்தை வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விமான ஓட்டிகளுக்கான அனுமதி பத்திரம் மற்றும் விமானத்தை இயக்குவது பற்றிய முழுமையான விவரங்கள் தெரிந்தவர்களை தவிர வேறு எவருக்கும் விமானத்தை இயக்க அதிகாரம் இல்லை என கூறப்படுகின்றது.
கேமரான் ஏர்பார்க்கில் வசிப்பவர்கள் மற்றும் விமானங்களை ஓட்டுபவர்கள் பெரும்பாலும் தொழில் ரீதியாக அல்லது ஓய்வுபெற்ற இராணுவ விமானிகளாக காணப்படுகின்றனர்.
விமானிகளுக்கான குடியிருப்பு
இந்தநிலையில், குறித்த கிராமத்தில் வசிக்கும் அனைவரும் தாங்கள் சொந்தமாக விமானங்களை வைத்திருப்பதை விரும்புகின்ற நிலையில் கமரூன் ஏர்பார்க் கடந்த 1963 ஆம் ஆண்டில் கட்டப்பட்டதுடன் இங்கே மொத்தம் 124 வீடுகள் அமைந்துள்ளன.
அத்தோடு, விமானங்களை வீடுகளுக்கு முன்பாக நிறுத்துவதற்கு வசதியாக இங்கு 100 அடி அகலத்திற்கு வீதிகள் அமைக்கப்பட்டுள்ளதுடன் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அமெரிக்கா விமானங்களின் செயல்பாட்டை ஊக்குவித்துள்ளது.
மேலும், விமான நிலையங்களை ஓய்வுபெற்ற இராணுவ விமானிகளுக்கான குடியிருப்பு விமானப் பூங்காவாக மேம்படுத்த அந்நாட்டின் விமானப் போக்குவரத்து ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் அதன் விளைவாகவே காமரூன் ஏர்பார்கில் வீட்டுக்கு ஒரு விமானம் நிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.